இராணுவ மேஜர் உட்பட மூன்று இராணுவ வீரர்கள் கைது

ஊடகவியலாளர் கீத் நோயார் மீது நடத்தப்பட்ட சம்பவத்தில் இராணுவ மேஜர் ஒருவர் உட்பட மேலும் இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.