இராணுவ முகாம்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிபதியிடம் கடிதம் – வடமாகாண ஆளுநர்

இராணுவ முகாம்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிபதியிடம் கடிதம் – ரெஜினோல்ட் குரே 

இராணுவ முகாம்களை மாற்றுவது

யாழ்ப்பாணம்.ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவ முகாம்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (15.11) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது வடமாகாணத்தில் காணிகள் கையளிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்திற்கு பதில் கிடைத்ததும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது, ஒல்லாந்தர் கோட்டையை இராணுவ முகாம்களை அமைப்பதற்கு தொல்பொருளியல் திணைக்களத்திற்குரியதை வழங்க அனுமதி தருவார்களா என்றும் வன்னியில் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள காரணிகளும் விடுவிக்கப்படுமா என்றும் மீண்டும் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, ஒல்லாந்தர் ஆட்சியின் போதும் இராணுவத்தினர் கோட்டையிலேயே இருந்தார்கள். எனவே, ஜனாதிபதியின் பதில் கிடைத்ததும் இராணுவ முகாம்களை கோட்டைக்குள் மாற்றுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முதலில், ஜனாதிபதியிடம் இருந்து பதில் கிடைக்கட்டும். வன்னி காணிகள் தொடர்பில் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]