இராணுவ ஜெனரல் மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக பதவி உயர்வு

முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இராணுவ ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ ஜெனரல்

 

 

 

 

 

 

21வது இராணுவத்தளபதியான இவர் நேற்று பிற்பகல் அமுலுக்கு வரும் வகையில் பதவி நிலைக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

1980 பெப்ரவரி மாதம் 6ம் திகதி இராணுவ சேவையில் இணைந்து 37 வருடம் தொடர்ந்து சிறந்த சேவையில் மூலம் ஜெனரல் சில்வா 1981 ஜூலை மாதம் 18ம் திகதி 2வது லெப்டினன் ஆக இலங்கை முதலாவது பொறியியல் படைப்பிரிவில் இணைந்து சேவையை ஆரம்பித்தார்.

1985ல் கப்டன் ஆகவும் 1989ல் மேஜராகவும் 1994ல் லெப்டினன் கேர்ணல் ஆகவும் 1997ல் கேர்ணல் ஆகவும் 2003ல் பிரிகேடியராகவும் 2009 நவம்பர் மாதம் 30ம் திகதி மேஜர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றவராவார். 2015 பெப்ரவரி மாதம் லெப்டினன்ட் ஜெனரலாக இவர் பதவி பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]