இராணுவ சீருடைகள், ஆயுதங்கள் மீட்பு

இராணுவ சீருடைகள்

மெதிரிகிரிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ சீருடைகள் இரண்டு, மெகஸின்கள் 5, இரண்டு கைக்குண்டுகள் மற்றும் ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் என்பன இதன்போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துளளனர்.

மெதிரிகிரிய பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]