இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?

இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளர்.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்ட இலங்கை இராணுவ அதிகாரி ஒருவரிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள்ளாக்கப்பட்ட இராணுவ அதிகாரி யார் என்ற விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரித்தானியா இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கள பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.