இராணுவம் வசமிருந்து 52.14 ஏக்கர் காணி விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் அரச மற்றும் காணிகள் விடுவிக்கப்பட்டு அதற்கான ஆவணங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கேதீஸ்வரனிடம் இலங்கை பாதுகாப்புப் படைகளின் முல்லைத்தீவு படைத்தளபதி மேஜர் ஜென்ரல் துஸ்யந்த ராஜ குருவினால் கையளிக்கப்பட்டது.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் நேற்று விடுவிககப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]