இராணுவத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தனியான அலுவலகம்

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், இராணுவம் தனியான நடவடிக்கை அலுவலகத்தை உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குகுலேகங்கவில் உள்ள இராணுவத்தின் அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி முகாமுக்கு சென்றிருந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இராணுவத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தனியான அலுவலகம் ஒன்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனறும் இராணுவத் தலைமையகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் அங்கு கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகளி்ன் அmமைதி படைகளில்இலங்கை படையினரை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த அலுவகம் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]