இராணுவத்தின் வசமிருந்த காணி பொதுமக்களிடம் கையளிப்பு

காணி

முல்லைத்தீவு பிரதேசத்தில் இராணுவத்தினர் வசம் இருந்த 132 ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேபாபிலவு மற்றும் சீனிமோட்டை ஆகிய பிரதேசங்களில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தினர் வைத்திருந்தத 132 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]