இராணுவத்தினரின் நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும் – விக்னேஸ்வரன்

வடக்கில் உள்ள இராணுவத்தினரின் நினைவுச் சின்னங்களை அகற்ற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து தொடர்பில், சில ஊடக சந்திப்புக்களில் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டனர்.

முதலமைச்சரின் இந்தக் கருத்தில் தவறில்லை என்றும், அவ்வாறான ஒரு கருத்தை வெளியிடுவதற்கு விக்னேஸ்வரனுக்கு உரிமை உள்ளது என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தின் ஊடாக நாட்டை பிரிப்பதாக கூறப்படவில்லை.

வெளிநாட்டில் உள்ள எதிரிகளுடன் யுத்தம் செய்யப்படவில்லை.

இந்த நாட்டில் உள்ள ஒரு சகோதர தரப்பினருடனேயே யுத்தம் செய்ததாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, தற்போது யுத்த நினைவுச் சின்னங்களை அமைத்துக்கொண்டிருக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான கருத்து ஊடாக அப்பாவி தமிழ் மக்களின் இரத்தத்தை கொதிப்படையச் செய்யும் நடவடிக்கையாகும்.

இதிலிருந்து விக்னேஸ்வரன் வெளியே வர வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எந்தவொரு நினைவுச் சின்னத்தையும் அகற்ற அரசாங்கம் தயாரில்லை என அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஏற்ற வகையில் நாட்டின் சட்டத்தை மாற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]