இராணுவத்தளபதி மற்றும் சட்ட மா அதிபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

இராணுவத்தளபதி மற்றும் சட்ட மா அதிபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை

யாழ் நாவற்குழி பகுதியில் 24 இளைஞர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விடயத்தில் இராணுவத்தளபதி மற்றும் சட்ட மா அதிபரை நீதிமன்றில் ஆஜராகமாரு யாழ் மேல் நீதிமன்று அழைப்பாணை விடுத்துள்ளது

1996 ஆம் ஆண்டு யாழ் நாவற்குழி மறவன்புலபு பகுதியில் இராணுவச்சோதனையின்போது 24 இளைஞர் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குறித்த காணாமலாக்கப்பட்ட இளைஞர்கள் மூவரின் உறவினரால் யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இழஞ்செழியன் விடுத்துள்ளார்

குறித்த 24 இளைஞர்களில் ஒன்பதுபேரின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கு 2003ம் ஆண்டுவரை யாழ் நீதிமன்றில் இடம்பெற்று வந்ததுடன் பாதுகாப்பு காரணங்களுக்காக அவ்வருடமே அநுராதபுரம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டதுடன் இன்று வரை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் இன்று இவ்விடயம் தொடர்பில் ஆட்கொணர்வு மனுவை குறித்த ஒன்பது உறவினர்களுடன் மேலும் மூன்று இளைஞர்களின் உறவினர்களும் இணைந்து யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்

நேற்று( 15.11 )இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் அவர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணிகளான கே.குருபரன் எஸ்.சுபாஜினி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றபோது நாவற்குழி பகுதியில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவரான துமிந்த மற்றும் இராணுவத்தளபதி மற்றும் சட்ட மா அதிபர் ஆகிய மூன்று தரப்பினரும் இவ்வழக்கின் எதிரிகள் தரப்பாக நேற்றைய வழக்கில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன், இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் அடுத்த தவணையான வரும் வருடம் ஜனவரி 18ம் திகதி மேற்குறிப்பிட்ட மூவரையும் மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வழங்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி இழஞ்செழியன் உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]