இராஜினாமா செய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் தீர்மானம்?

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற அரச நிகழவில், தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் ஓங்க வேண்டும் என, விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டதுடன், நாடாளுமன்றத்திலும் இது குறித்து சூடான நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள், மற்றும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதற்கு விஜயகலா மகேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]