இன விரிசலை ஏற்படுத்துவதற்கு தயவுசெய்து இந்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டாம்- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

இன விரிசலை ஏற்படுத்துவதற்கு தயவுசெய்து இந்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டாம்- எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

இன விரிசலை ஏற்படுத்துவதற்கு தயவுசெய்து இந்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபைக்கான வேட்புமனுவை இன்ற்று (21) மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலைப் பொறுத்தவரை ஆட்சியை மாறுகின்ற ஜனாதிபதியை மாற்றி தேலிய கொள்கைகளைத் தீர்மானிக்கின்ற தேர்தல் அல்ல. தங்களுடைய கிராமங்களை கட்டியெழுப்புகின்ற சுத்தம் செய்கின்ற, பிரதேச அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற பிரதிநிதிகளைத் தெரிவுசெய்கின்ற தேர்தலாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான் இந்த அரசாங்கம் எதிர்வருகின்ற மூன்று ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கப்போகின்றது. இந்த மாவட்டத்திலுள்ள சகல மக்களும் இன மத மொழி வேறுபாடுகளின்றி எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்வதன் ஊடாக எதிர்வருகின்ற நான்கு ஆண்டுகளில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும்.

அந்த வகையில் சுமார் 1000 கிவோமீற்றர் வீதிகள் கார்ப்பட் இடுவதற்கான பல கோடி ரூபாய் நிதியினை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. இந்த மாட்டத்தை பூரணமாகக் கட்டியெழுப்ப எதிர்வருகின்ற சந்தர்ப்பத்தை எமது கட்சிக்கு வழங்க வேண்டும்.

நாங்கள் எந்தவொருn சபையிலும் தலைவரையோ தவிசாளரை அடையாளப்படுத்தி பிரசாரம் செய்வதில்லை. தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர்களையும் கட்சி தீர்மானிக்கும்.

இன விரிசலை ஏற்படுத்துவதற்கு தயவுசெய்து இந்த தேர்தலைப் பயன்படுத்த வேண்டாம். இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் இந்த தேர்தலைப் பயன்படுத்தும் போது மீண்டும் சமூகங்களிடையே மேதல் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வெல்லப்படும் கட்சிகளினால் எந்தவொரு பணியையும் செய்ய முடியாது.

அரசாங்கம் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் மிகவும் கவனமாக உள்ளது ஜனாதிபதி அவருடைய ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். அந்த விடயங்களை பாராளுமன்ற மட்டத்தில் உள்ளவர்கள் பேசித் தீர்க்க முடியும்.

உள்ளுராட்சி மன்றத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு சபைகளிலும் அதிகமான தேவைகள் உள்ள மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்னும் கிறவல் வீதிகளைக் கூட போட முடியாமல் உள்ளது. 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் இன்றி வாழ்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]