இராஜாங்க அமைச்சர் இராதா பயணித்த வாகனம் விபத்து

இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் பயணம் செய்த உத்தியோகபூர்வ வாகனங்கள் ஏறாவூரில் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் விபத்துக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மைலம்பாவெளியிலுள்ள கோயிலொன்றுக்குச் சென்று வழிபட்டுவிட்டு கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலை ஊடாக மீண்டும் மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட போது அவர் பயணம் செய்த வாகனமும் அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பயணம் செய்த வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில், அதிஸ்டவசமாக அமைச்சருக்கோ அல்லது வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கோ எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும், உதவிக்கு விரைந்த மற்றொரு வாகனத்தில் அமைச்சர் மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]