இராஜகிரிய மேம்பாலம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு


இராஜகிரிய பகுதியில் நெடுங்காலமாக நிலவிய வாகன நெரிசலுக்கு தீர்வாக இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொதுமக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டது.

இந்த பாலத்தை நிர்மாணிப்பதற்காக 471 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.