இராகலை வீதியில் கற்பாறை சரிவு

இராகலை கஹந்தெனிய வீதியில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்ததையடுத்து, அந்த வீதியினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதியின் ஒரு பகுதி முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், மேலும் இரண்டு பாறைகள் உடைந்து விழும் ஆபத்திலிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இராகலை கஹந்தெனிய வீதியில் வாகனங்களை செலுத்தும்போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி கற்பாறைகளை அகற்றுவதற்கு பயன்படுத்திய முயற்சி தோல்வியுற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]