இரவோடு இரவாக சிவாஜி சிலை அகற்றப்பட்டது

சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இரவோடு இரவாக

நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலை போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் புதன்கிழமையன்று நள்ளிரவில், இயந்திரங்களின் மூலம் சில மணி நேரத்தில் சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது.

இரவோடு இரவாகஅங்கிருந்து ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலை, சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அந்த இடத்தில் இந்தச் சிலை நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இரவோடு இரவாக சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது தமிழகத்திற்கு தலை குனிவு என சிவாஜி ரசிகர்களின் அமைப்பான சிவாஜி சமூக நலப் பேரவை தெரிவித்திருக்கிறது.  இரவோடு இரவாக இரவோடு இரவாக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]