இரவு 11 மணிவரை மதுபானசாலைகள் திறந்திருக்கும்

மதுபானசாலைகள்

இரவு 11 மணிவரை மதுபானசாலைகள் திறந்திருக்கும்

மதுபான விற்பனை நிலையங்களை திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் கொண்டுவர நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை திறந்திருக்கும்.

மதுபான விற்பனை செய்யும் இடங்கள், வெளிநாட்டு மதுபானம் விற்பனை செய்யும் இடங்களுக்கு இது பொருந்தும்.

அத்துடன், சுற்றுலா அனுமதிப்பத்திரத்துடன் உள்ள ஹோட்டல்கள் நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுமதிப்பத்திர உரிமையாளரின் கோரிக்கைக்கு அமைய அதிகாலை 2 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படும் என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மதுபானங்களை சில்லறையாக விற்கும் அனுமதிப்பத்திரம் பெற்ற நிலையங்களில் காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானியில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கையெழுத்திட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]