இரவு வேளைகளில் கையடக்க தொலைபேசியை காதிற்கு அருகில் வைத்து தூங்குபவரா நீங்கள்? எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார பிரிவு

இரவு வேளைகளில் உறங்கும் அறையில் தமக்கு அருகில் கையடக்க தொலைபேசிகளை வைத்துக்கொள்வதால் மூளையுடன் நரம்பு மண்டலத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை செயலிழக்க செய்தோ அல்லது அகற்றியோ வைக்குமாறு சுகாதார பிரிவு, பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்காந்த அலைகள் தொடர்ந்து காணப்படுவதால் கையடக்க தொலைபேசிகளை அருகில் வைத்து உறங்குவன் காரணமாக புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக விசேட மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் கையடக்க தொலைபேசிகளை காதிற்கு அருகில் வைத்து பயன்படுத்துவதை விட hands free கருவியை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]