இரவு நேர ரயில் சேவைகள் இரத்து

                   இரவு நேர ரயில் சேவைகள் இரத்து

இன்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த அனைத்து இரவு நேர ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

ரயில் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம் தொடர்பில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்தை தோல்வியடைந்துள்ளது.

இதனையடுத்து, தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் சாரதி உதவியாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் நேற்று நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை போக்குவரத்து அமைச்சில் இன்று நண்பகல் இடம்பெற்றது.

இந்நிலையில், இரவு நேர ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]