இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தில் மண்சரிவு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில், இதனால் மலையகப் பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழையுடன் பெரும் காற்றும் வீசி வருகின்றது.

இதனால் அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள் மட்டுமன்றி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]