இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையிலும் பார்க்க அதிகம் என தேசிய டெங்கு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 1656 டெங்கு தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தவகையில் நிவித்திகலை பிரதேச செயலகபிரிவில் அதிகூடிய டெங்கு நோயாளர்களாக 232 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன், குருவிட்டவில் 159 பேரும், எகலியகொடவில் 161 பேரும் எலபாத்தவில் 159 பேரும், இரத்தினபுரி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 139 பேரும் இரத்தினபுரி நகரத்தில் 124 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுபாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் குருவிட்ட பிரதேச செயலக பிரிவில் டெங்கு தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் மக்கள் அதிகம் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள் அனைவரும் டெங்கு பரவாத வகையில் சூழலை வைத்திருக்க வேண்டுமென டெங்கு கட்டுபாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]