இரத்தினபுரி மர்ம கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது

இரத்தினபுரி மர்ம கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது

இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ள மர்ம கொலை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்து கைது சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளதோடு, கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் ஒரே முகவரியில் வசிக்கும் 24 மற்றும் 23 வயதானவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த சந்தேகநபர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயற்பட்டமையே இக்கொலைக்கு காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி– பாமன்கார்டன் பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த தனபால் விஜேரத்னம் என்பவர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரத்தினபுரி மர்ம கொலை

இரத்தினபுரி மர்ம கொலை இரத்தினபுரி மர்ம கொலை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]