இரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையம் திறப்பு

இரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையம் திறப்பு

இரத்தினபுரியில் புதிதாக தேயிலை விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி-லெல்லோபிட்டிய பகுதியிலேயே தேயிலை விற்பனை நிலையம் இம்மாதம் 1ஆம் திகதி அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தரமான தேயிலைகளை வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கை மக்கள் கொள்வனவு செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு புதிதாக திறக்கப்பட்டுள்ள தேயிலை விற்பனை நிலையத்தில், தேனீர் அருந்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் தேயிலை வரலாற்றை தெளிவுபடுத்தும் அருங்காட்சியகம் ஒன்றையும் அப்பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இலங்கை வரலாற்றில் தேயிலை ஊடாக நாடு அடைந்த பயன்கள் தொடர்பில் அனைவரும் இதன் ஊடாக அறிந்துகொள்ள முடியுமெனவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரியில் புதிதாக இரத்தினபுரியில் புதிதாக இரத்தினபுரியில் புதிதாக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]