இரத்தினபுரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனின் கை துண்டாக்கப்பட்டது

இரத்தினபுரி பெல்மடுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் கை உடலிலிருந்து வேறாக கழன்று சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் பேருந்தில் குறித்த மாணவர் தனது கையினை சாரளத்திற்கு (ஜன்னல்) வெளியே வைத்துக்கொண்டு பயணித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பயணிகள் பேருந்திற்கு எதிரே வந்த பாரவூர்தி ஒன்று பேருந்தினை மிகவும் நெருக்கமான முறையில் எதிர்நோக்கி கடந்து சென்றுள்ளது.

இதன்போது ஜன்னலுக்கு வெளியே கையை வைத்துக்கொண்டு பயணித்த மாணவரின் கை துண்டாக உடைந்து கீழே விழுந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே மாணவர் மயக்கமுற்றுள்ளார் என்பதோடு மாணவர் மற்றும் மாணவரின் கையோடு வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் பேருந்து மற்றும் பாரவூர்தி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதோடு விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]