இரத்தப்பரிசோதனை – கட்டணங்கள் குறைப்பு

தனியார் வைத்தியசாலைகள் , இரசாயன கூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த பரிசோதனை மற்றும் டெங்கு இரத்த பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் இன்று முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இரத்தப்பரிசோதனை

சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவின் வேண்டுகோளுக்கமைவாக இன்று முதல் குறைக்கப்படுகின்றது.

இதற்கமைவாக தனியார்வைத்தியசாலைகளில் முழுஅளவிலான இரத்த பரிசோதனைகளுக்கு 250 ரூபா ( Full blood Count (FBC)), டெங்கு தொடர்பான இரத்த பரிசோதனைக்கு (Earlier the Dengue Antigen Test) 1000 ரூபா மாத்திரமே அறவிடப்படமுடியும்.

முன்னர் இந்த சோதனைக்கு 3000 ரூபாவிற்கு மேற்பட்ட தொகை அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]