இரண்டு ஹெலிகொப்டர்கள் மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில், தரையிரங்கியதால் சேதம்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுடன் வருகைத்தந்த இரண்டு ஹெலிகொப்டர்கள், தங்காலை பஸ் தரிப்பிடத்துக்கு பின்னால் அமைந்துள்ள, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில், தரையிரங்கியபோது ஏற்பட்ட அதிக காற்று காரணமாக, தங்காலை நகரில் அமைந்துள்ள பல வர்த்தக நிலையங்களின் கூரைத்தகடுகள் மற்றும் பெயர்பலகைகள், சேதமடைந்துள்ளதுடன், விளையாட்டரங்கின் மண்டபத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த ஹெலிகொப்டர்கள் இன்று(04), பிற்பகல் தரையிறங்கிய போதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]