இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கைது

வேட்பாளர்கள்

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில், இரண்டு வேட்பாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் சட்டங்களை மீறிய 11 சம்பவங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான 21 முறைப்பாடுகளுக்கு அமைய இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி முதல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட 95 சம்பவங்கள் மற்றும் தேர்தல் முறைப்பாடுகள் 212 என்பன பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்வில் 27 வேட்பாளர்கள் உள்ளிட்ட 258 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]