இரண்டு யானைதந்தங்களுடன் நபர் ஒருவர் அதிரடி கைது

வவுனியா ஓமந்தை பகுதியில் இரண்டு யானைதந்தங்களை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேடஅதிரடிபடையினர் கைதுசெய்துள்ளதாக வவுனியா வனயீவராசிகள திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம்தொடர்பாக தெரியவருகையில் குறித்த பகுதியில் யானைதந்தங்களை ஒருவர் கைவசம் வைத்திருப்பதாக விசேடஅதிரடிபடையினருக்கு தகவல்வழங்கபட்டிருந்தது. இதனடிப்படையில் குறித்த பகுதிக்குசென்ற படையினர் ஒமந்தை பகுதியில்உள்ள காட்டுபகுதியில் மறைத்துவைக்கபட்ட நிலையில் இரண்டு தந்தங்களை மீட்டுள்ளனர்.

மீட்கபட்ட தந்தங்கள் வவுனியா மாவட்ட வனயீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் நெல்வேலிகுளம் பகுதியைசேர்ந்த ஒருவர் கைதுசெய்யட்டு போலிசாரிடம் ஒப்படைக்கபட்டு நேற்றயதினம் நீதிமன்றில் ஆயர்படுத்தபட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]