இரண்டு மாடி கட்டடமொன்றில் தீ

களுத்துறை, தொடங்கொட சந்தியில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டடமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தினை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற தொடங்கொட பொலிஸார் மற்றும் களுத்துறை தீயணைப்பு படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் சேத விவரங்கள் மதிப்பிடப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளர்.

இந்நிலையில், தீ விபத்து சம்பவம் தொடர்பில் தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]