இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னை விட்டுவிடு – பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை செய்தேன்!

பெண் ஒருவர் தனது மகனுடன் இணைந்து ரவுடி தங்கராஜை தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் இந்தியா வேலூர் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 17ம் திகதி குறித்த கொலை நடந்துள்ளது. தற்போது இக்கொலை தொடர்பில் குற்றவாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தண்டுமாரி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பொலிஸ் விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரவுடி தங்கராஜ், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினார். மேலும், தங்கராஜ் ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

சம்பவத்தன்று இரவும், மது போதையில் வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னை விட்டுவிடு என அவனிடம் மன்றாடினேன். ஆனால் அவன் கேட்கவில்லை.

தொடர்ந்து தங்கராஜ் ஆக்ரோஷமாக தாக்கி பாலியல் தொல்லை அளித்ததால், அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்றேன். இதில் எனது மகன்கள் ஈடுபடவில்லை, நான் மட்டுமே கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொலைசெய்யப்பட்ட ரவுடி தங்கராஜ் மீது கொலை உட்பட 30க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]