இரண்டு பிள்ளைகளின் தாய் கூட்டு வன்புணர்வு

30 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கின்னொருவ பகுதியில் வசித்துவரும் குறித்த பெண்ணின் கணவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சேவை புரிவதுடன் அவருக்கு 6 மற்றும் 2 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (22) அதிகாலை தனது பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் ஜன்னல் ஊடாக சந்தேக நபர்கள் உள்ளே நுழைந்து வன்புணர்வு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமது பிள்ளைகளுடன் சேர்ந்து கூச்சலிட்ட போது சந்தேகநபர்கள் கத்தியை காட்டி பயமுறுத்தியதாகவும், பின்னர் குழந்தைகளை உறங்கவைத்துவிட்டு வீட்டுக்கு வெளியில் வருமாறு அச்சுறுத்தியதாக குறித்த பெண் கிராந்துருகோட்டை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீட்டுக்கு வெளியில் தன்னை அழைத்த சந்தேக நபர்கள் மூவர் இணைந்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண், மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 19, 24, 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]