இரண்டு துண்டான உடல்; கால்கள் தமிழகத்திலும் உடல் ஆந்திராவிலும் மீட்பு!

இளைஞர் ஒருவரின் கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் அவர் உடல் 20 மணி நேரத்திற்கு பின் ஆந்திர மாநில லாரி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் (28) இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.  இவர் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளார்.

நேற்று முந்தினம் வேலை முடித்து வீடுதிரும்பாத சுதாகரை, காணவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை, தொடர்ந்து சுதாகரை தேடியதில் கால் மட்டும் மீட்கப்பட்டது.

பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், தனது பைக்கில் ஒரு லாரியை முந்தி செல்லும் போது எதிரே வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.

பொலிசாருக்கு 20 மணி நேரத்திற்கு பின் ஒரு உடல் ஆந்திர மாநிலம் லாரியில் இருப்பதாக அம்மாநில பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அது சுதாகரின் உடல் தான் என்று பொலிசார் உறுதி செய்தனர், மேலும் விபத்தின் போது அவர் தூக்கி வீசப்பட்டு லாரியில் விழுந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]