இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்கிடையில் மோதல் – நடத்துனர் மீது கொலை வெறி தாக்குதல்!

இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடத்துனரொருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பதுளை – கொழும்பு சேவையில் உள்ள தனியார் இரண்டு பஸ் ஊழியர்களுக்கிடையிலேயே இந்த தகராறு இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து  கொழும்பு நோக்கி பயணித்த போது எல்ல, மில்லகமவில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த நடத்துனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை கைது செய்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]