முகப்பு News Local News இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

களுத்துறை களிடோ கடல் பகுதியில் நீராடச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

11 வயதான இரண்டு சிறுமிகளே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழுவொன்றுடன் குறித்த கடற்பகுதிக்கு நீராடச் சென்ற நிலையில், தாய், தந்தை, மகள், மற்றுமொரு சிறுமி உள்ளிட்டவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

அதனையடுத்து, அவர்களை மீட்ட கடற்படையினர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலன்றி சிறுமிகள் இருவரும் இன்று அதிகாலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் இருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com