இரண்டு சடலங்கள் மீட்பு

குருநாகல், வாரியபொல, மலகனே குளத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குளத்தில் இடம்பெற்ற படகு விபத்தில் காணாமல் போயிருந்த நபர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய இருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றுக் காலை தாமரை இலைகளை பறிப்பதற்காக 5 பேருடன் படகில் பயணித்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து, நீரில் மூழ்கிய ஐவரில் மூவர் நீந்தி கரையை அடைந்திருந்தனர்.

பின்னர், காணாமல் போன இளைஞர்களை தேடும் நடவடிக்கையை, கடற்படை மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்பு குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், மீட்கப்பட்ட இருவருடைய பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.