உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் தொகுத்து வழங்கு பிக் பாஸ் இரண்டாவது சீசன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனிதே தொடங்கியது. வழக்கமான அறிமுகங்களுடன் போட்டியாளர்கள் அனைவரும் வாழ்த்துகளுடன் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த சீசன்களில் பல்வேறு டுவிஸ்டுகளையும், சர்ப்ரைஸ்களும் நாட்கள் செல்ல செல்ல அளித்தனர். ஆனால் இந்த சீசனில் முதல் நாளே பிக் பாஸ் முதல் சீசனின் கதாநாயகி ஓவியாவை விருந்தாளியாக களமிறக்கியிருக்கிறார்கள். இது ஓவியா ஆர்மி உள்ளிட்ட அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தாலும், போட்டியாளர்கள் மத்தியில் டரியல் ஆக்கியது.
அவர் விருந்தாளி என்று நமக்கு தெரிந்தாலும், போட்டியாளர்களுக்கு தெரியாதது முதல் நாளில் வைச்சு செம டுவிஸ்ட்.
இந்நிலையில், வழக்கம் போல் அடுத்த நாள் என்ன நடக்கிறது என்பதை காட்டும் விதமாக புரொமோக்கள் திங்கள்கிழமை (இன்று) ஒளிபரப்பப்பட்டன. இதில், போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கை பொன்னம்பலம் வாசிக்க, இதர ஹவுஸ்மேட்ஸ் கவனமாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதன்படி, பெட்ரூம்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று என்வெளப்பை கண்டு பிடிக்க வேண்டும் என்கிறார். அப்போது ஆண், பெண் என அனைவரும் பெட்ரூமுக்குள் சென்று தேடுகின்றனர்.
அந்த சமயத்தில் பெண்களின் துணிகளில் கை வைக்க கூடாது என்று ஆண்களுக்கு ஸ்டிரிட்டாக மும்தாஜ் கட்டளையிடுகிறார். இதற்கு, அப்படி பார்க்காமல் பின் எப்படி பார்ப்பார்கள் என காட்டமாக கூறி வெளியே நடக்கிறார்.
பின்பு மற்றொரு காட்சியில் கேமராவைப் பார்த்து ஐ ஏம் சாரி என மும்தாஜ் கேட்பது போல் காட்சியும் இடம்பெறுகிறது.
இதேபோல் மற்றொரு புரொமோவில், டைனிங் டேபிளில் உட்கார்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு காட்சியில் மும்தாஜ் முன்னால் மலை மலை பாடலுக்கு பொன்னம்பலம் டான்ஸ் ஆடி, சென்றாயனிடம் ஸ்டெப் ஓகே வா எனக் கருத்து கேட்பது போல் உள்ளது.
கடந்த சீசனைப் போல் இல்லாமல், முதல் நாளிலிருந்து சண்டை, அதிரடி, வாக்குவாதம் என்று தற்போது பிக் பாஸ் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் நாள்தோறும் பல சுவாரஸ்ய நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் எனத் தெரிகிறது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]