முகப்பு Sports இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இடையில் இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதன்போது மைதானத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் போட்டிக்கு இடையில் மோதல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனை சமாதானப்படுத்த முயற்சித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் திஸ்ஸ பண்டார காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மூலம் மைதானத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பிரதானி குடிபோதையில் நபர் மீது போத்தலை தூக்கி வீசியுள்ளார். இதன்போது அவர் காயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com