இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்த ஜனாதிபதி புகைப்படங்கள் உள்ளே

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிவிருத்திக்கு பின்னரான இரணைமடுகுளத்தின் வான்கதவினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

இரணைமடுவுக்கு இன்று முற்பகல் 10.30 மணியளவில் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட குளத்தின் பெயர் கல்வெட்டினை திறந்து வைத்துள்ளார்.

குறித்த குளமானது வடமாகணத்தில் அதி முக்கியத்துவம்பெறும் குளமாக கருப்படுகின்றது.

யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில், மக்களின் அதி முக்கியத் தேவைகளை கருத்திற்கொண்டு அபிவிருத்தியை கருத்திற்கொண்டு இந்த குளம் மீள் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதன் போது, இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகனிடம் இரணைமடுகுளத்தின் ஆவணத்தையும் கையளித்துள்ளார்.

மேலும் விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்ட பொங்கல் நிகழ்வையும் அரிசியிட்டு ஆரம்பித்து வைத்தார்.

இரணைமடுகுளத்தின் இரணைமடுகுளத்தின் இரணைமடுகுளத்தின் இரணைமடுகுளத்தின் இரணைமடுகுளத்தின் இரணைமடுகுளத்தின்

இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது. இதுவரை காலமும் 106,500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்ளளவு தற்போது 119,500 ஏக்கர் அடியாக (147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 8500 ஏக்கர் பரப்பளவில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இனிவரும் காலங்களில் 12,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]