இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உறுதி

பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிளிநொச்சி இரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரத்துக்குள் தீர்வை பெற்றுத்தருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இரணைமாதா நகரில் பேரராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களுடன் கலந்துரையாடினார்.

இரணைதீவு மக்களுக்கு

ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார். என்னாள் இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்க முடியாது. இரண்டு வாரங்களுக்குள் தீர்வை பெற்றுத்தருவதாக மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
இச் சந்திப்பில் சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]