ரணிலை விட்டு மஹிந்தவிடம் தாவிய வடிவேல் சுரேஷ்- அமைச்சு பதவியையும் பெற்றார்

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்த அடுத்த சில மணியில் அவர் மகிந்தவுக்கே ஆதரவு என ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

எனினும் இன்று காலை அலறி மாளிகையில் நடைபெற்ற ரணில் தரப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேல் சுரேஷ் , மகிந்தவுக்கு அதரவு பற்றி வெளியான செய்திகளை மறுத்து தனது ஆதரவு ரணிலுக்கே என கூறியிருந்தார்.

அதுமட்டுமன்றி தன்னை பற்றி பொய் செய்தி பரப்பிய ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் மிகவும் நாசுக்காக கூறியிருந்தார்.

இரட்டை வேடம்இரட்டை வேடம்

ஆனால் தற்போது நிலைமை அவரின் உண்மை முகத்தை புலப்படுத்தியுள்ளது.

தற்போது பதவி ஏற்றுள்ள மகிந்தவின் புதிய அமைச்சரவையில் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு பதவி பிரமாணம் செய்துள்ளார்.

இதன் மூலம் தனது அரசியல் இலாபத்துக்காக ஊடகங்களின் செய்தியை மறுத்து சட்ட நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டிய வடிவேல் சுரேஷ் , பெருந்தோட்ட மக்களின் நலனில் எந்தளவு அக்கறை எடுப்பார் என்பது சந்தேகமே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]