இரட்டை சதத்தால் துடுப்பாட்டத்தில் 2ஆம் இடத்திற்கு முன்னேறிய புஜாரா

ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்ததால் புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்டத் தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்தப் போட்டி சமநிலையில் முடிந்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 178 ஓட்டங்களைக் குவித்திருந்தார். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கியபோது பதிலடியாக இந்தியாவின் புஜாரா 202 ஓட்டங்களைக் குவித்தார்.

 புஜாரா
புஜாரா

புஜாரா இரட்டை சதம் அடித்ததால் டெஸ்ட் துடுப்பாட்டம் தரவரிசையில் விராட் கோலி, ஜோ ரூட் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்மித் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

ஸ்மித் 941 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். புஜாரா 861 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், ஜோ ரூட் 848 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும், விராட் கோலி 826 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலும், கேன் வில்லியம்சன் 823 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

பாகிஸ்தானின் அசார் அலி 779 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும், யூனிஸ்கான் 772 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், டேவிட் வார்னர் 768 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா மற்றும் குயிண்டான் டி காக் முறையே 9ஆவது இடத்தையும், 10ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.