இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிவரை விளக்க மறியலில்

இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிவரை விளக்க மறியலில்.

இரட்டைக் கொலை சம்பவத்துடன்

மட்டக்களப்பு சவுக்கடி இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என ஏறாவூர்ப் பொலிஸாரால் கைதுசெய்யப்ப்டட மூவரை எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி உத்தரவிட்டுள்ளார்.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த திருமதி மதுவந்தி பீதாம்பரம் (வயது 26) மற்றும் அவரது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் (வயது 11) ஆகியோர் செவ்வாய்கிழமை (17.10.2017) இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இரட்டைக் கொலை சம்பவத்துடன்

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 20 இற்கு மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. 16 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் மூவர்; கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தவிட்டார்.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர்ப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இரட்டைக் கொலை சம்பவத்துடன்இரட்டைக் கொலை சம்பவத்துடன்இரட்டைக் கொலை சம்பவத்துடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]