இரகசிய கூலிப்படையை நாங்கள் ஒருபோதும் இயக்கவில்லை திட்டவட்டமாக நிராகரிக்கும் கோட்டா

இரகசிய இராணுவக் கூலிப்படையொன்றை தான் பதவிவகித்த காலத்தில் இயக்கவில்லை முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக நிராகிரித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ
கோட்டாபய ராஜபக்ஷ

கடந்த ஆட்சியில் இரகசிய கூலிப்படைகளை வைத்து தமிழர்கள் மற்றும் பலரை வெள்ளை வானில் கடத்திக் கொலை செய்யப்பட்டதாக முன்னாள் முப்படைத் தளபதியும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்கோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவ்வாறான கொலைப் படைகளை உருவாக்க இராணுவத்திற்கு முடியும் என்ற போதிலும், அது குறித்து இராணுவத் தளபதி அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதோடு அந்தப் படை சார்ந்த எழுத்து மூலமான ஆவணங்கள் இராணுவத் தலைமையகத்தில் பேணப்பட வேண்டும்.

எனினும் தாம் பதவிவகித்த காலத்தில் இப்படியான கூலிப்படைகள் இருந்திருக்கவில்லை. அரசியலில் பிரவேசிப்பதற்கு இதுவரை தீர்மானம் எடுக்கவில்ø. 2020ஆம் ஆண்டில் நடத்த எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் எண்ணமும் இல்லை.

இரகசிய கூலிப்படையை
கோட்டாபய ராஜபக்ஷ

பிரதமர் பதவியோ அல்லது ஜனாதிபதி பதவியோ தனக்கு அவசியம் இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் எந்த தலைமைத்துவத்தையும் வகிக்க தன்னால் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]