இயற்கை பிரியர்கள் உலாவி திரிய தகுந்த இடம்!

மலைநாட்டு சுற்றுலாக்களில் எழுதப்படாத சட்டங்களான அணைக்கட்டுகள், மின்னுற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை புறந்தள்ளிவிட முடியுமா என்ன? பிறகு “ஹட்டனுக்கு போனீங்களே, லக்ஷபான நீர்வீழ்ச்சி பாக்கல்லையா?” என்ற கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது?

கினிகத்தேனையை அண்மித்ததும் எம்முடன் இருந்த ஒரு ‘என்சைக்ளோபீடியா’ கினிகத்தேனை சந்திப்பிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சி ஒன்று இருப்பதாக அறிவித்தது.

“ப்ளான மாத்துவம் மச்சான், வாகனத்த இடதுபுறம் பள்ளத்தில் விடு” என்று ஒருவர் அறிவிக்க, ஏகமனதாக அத்திட்டம் ஆமோதிக்கப்பட்டது. “அபடீன் நீர்வீழ்ச்சி” (Aberdeen Falls) -இலங்கைத் தேயிலையில் காதல்கொண்டு வந்துசேர்ந்த ஸ்கொட்லாந்து நாட்டவர்களினால் இலங்கையின் முக்கிய இடங்களுக்கு வைக்கப்பட்ட பெயர்களில் இதுவும் ஒன்று.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]