வாசுவின் குடும்பத்திற்க்கு வாழ வாய்ப்பளித்த நடிகர்கள்

தமிழ்திரையுலகின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர்தான் P.வாசு.இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களிற்க்கு மத்தியில் சின்ன தம்பி, மன்னன் ,சந்திரமுகி ,குசேலன், உழைப்பாளி , சேதுபதி IPS, நடிகன் போன்ற மாபெரும் வெற்றி படங்களும் வெளிவந்திருக்கிறது, அதுமட்டும்மல்லாது தயாரிப்பாளர் ,நடிகர் என சினிமாத்துறையில் பல பரிணாமங்களை கொண்டவர் P.வாசு. அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ,அவர்களின் வீட்டினை மீட்டுக்கொடுத்த இரு நடிப்பு சக்கரவர்திகளை நெகிழ்ந்து பேசியிருக்கிறார் பி.வாசு.  வாங்க பார்ப்பபோம்.


இயக்குனரின் அப்பாதான் ஒப்பனை கலைஞர் பிதாம்பரம் அவர்கள். இவர் 60 மற்றும் 90 வரையான காலப்பகுதிகளில் வெளிவந்த பழைய திரைப்படங்களுக்கு ஒப்பனை கலைஞராக பணிப்புரிந்திருக்கிறார்.பெரிய கூட்டு குடும்பமான இவர்களுடைய குடும்பத்தில் மட்டும் கிட்டதட்ட 40 பேர்களாம்.செல்வந்த குடும்பமான இந்த குடும்பத்தில் வாசு அவர்கள் வறுமை தெரியாது வாழ்ந்து வந்திருக்கிறார்.சில காலங்களில் P.வாசு அவர்களுக்கு படிப்படியாக வறுமை ஊடுறுவும் போதுதான் தெரியவந்திருக்கிறது தங்கள் வீடு அடமானத்தில் இருக்கும் விடயம்.

ஒருநாள் படப்பிடிப்பின் போது MGR அவர்கள் பிதாம்பரம் அவர்களை அழைக்க,ஒன்னும் புரியாத பிதாம்பரம் அவர்கள் MGR முன் திகைத்து நின்றார்களாம், உடனே “தம்பி என் அடுத்த படத்திற்க்கு நீ வேலைய துவங்கு, உன் வீட்ட மீட்டெடுனு “சொன்னார்களாம், நம்ம புரட்சிகலைஞர். உடனே தன் முகாமையாளரான குஞ்சப்பனிடம் அனுப்பிவிட்டார்களாம் MGR. பின்பு பெட்டன சேதம்’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் மறுவடிவமைப்பான ‘கொடுத்து சிவந்த கைகள்’ எனும் படத்திற்க்கு ஒப்பந்தம் செய்து 1973ம் ஆண்டுகளிலேயே 3.5 லட்சம் ரூபாய்களை முற்பணமாக கொடுத்து இருக்கிறார்கள்.

இது நடந்த மறுநாள் இன்னொரு படப்பிடிப்பில் இருந்த NTR அவர்கள் பிதாம்பரத்தை அழைத்து “என் சகோதரன் உதவி செய்யும் போது நான் மட்டும் பார்த்துகிட்டு இருக்க முடியாது, “நீங்க எனுக்குதான் முதல்ல ஒப்பனை பண்ணியிருக்கீங்க, அதனால் சகோதரன் படம் முடிய இன்னொரு படம் பண்ணுங்கனு “சொல்லியிருக்காரு NTR. அதுதான் தெலுங்கில் வெளிவந்த “அண்ணா தம்பில ஆனபந்தம் “திரைப்படம். இது தமிழ் திரைப்படமான “நாளை நமதே படத்தின் ரீமேக்காகும்.இந்த விடயத்தினைதான் சொல்லுவாங்க “கொடுக்கிற தெய்வம் இரண்டு இதயமுள்ள இமயங்களிடமிருந்து கொடுக்கும்” என்று.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]