இயக்குனர் மண்டையை பதம்பார்த்த அஞ்சலி- அதிர்ச்சி தகவல் உள்ளே

நடிகை அஞ்சலி லிசா என்ற பேய் படத்தில் தற்போது நடித்து வருகிறார். மேலும், கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி.

சமீப காலமாக குடும்பம், காதல் என பல விஷயங்கள் இவருக்கு எதிராக அமைந்துவிட்டன. தற்போது, குண்டாக இருந்த தன்னை உடற்பயிற்சி மூலம் ஒல்லியாக மாற்றி மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் அஞ்சலி.

சமீப காலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தார் அஞ்சலி. இந்நிலையில், கீதாஞ்சலி படத்தின் மூலம் மீண்டும் கவர்ச்சி வேடத்தில் நடித்துள்ளார். படத்தில் படுக்கையறை காட்சிகள் மற்றும் நீச்சல் உடை அணிந்து நடிக்கும் காட்சிகளில் அம்மணி இன்னும் தாராளம் காட்டி உச்ச கட்ட கவர்ச்சியில் நடிக்கவுள்ளாராம்.

3D படமாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் நேற்றைய படப்பிடிப்பில் ஒரு தோசைக்கல்லை கேமரா முன்பு வீச வேண்டும் குறிப்பிட்ட தூரம் வந்ததும் ஒருவர் அந்த தோசைக்கல்லை தட்டி விட்டு விடுவார். ஆனால், இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும் அவரது தலையை நோக்கி அந்த தோசைக்கல்லை வீசி விட்டார். தோசைக்கல்லும் இயக்குனர் மண்டையை பதம் பார்த்தது. ரத்தம் சொட்ட கதறிய அவரை உடனடியாக மருத்துவமைக்கு அழைத்துசென்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]