இயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இயக்குனர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

இயக்குனர் மணிரத்னத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளது.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கே இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மிரட்டலானது, தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டதாகவும், செக்கச் சிவந்த வானம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த மிரட்டல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இப்படம் தற்போது அதிகளவான திரையரங்குளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றது.

இதில் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]