“அடர்ந்த காடுகளின் மீது மக்கள் வைத்திருக்கும் அன்பை, எங்களின் ‘வனமகன்’ படம் இரட்டிப்பாக்கும்” என்று ‘உலக வன நாள்’ அன்று கூறுகிறார் இயக்குநர் விஜய்

தமிழ் திரையுலகில்,  சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை தங்களின் திரைப்படங்களில் உள்ளடக்கி இயக்குகின்ற இயக்குநர்கள் ஒரு சிலர் தான். அந்த ஒரு சிலரில் இயக்குநர்  விஜய் அடங்குவார் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். கலை நயத்தோடு ஒரு படத்தை உருவாக்கும் இயக்குநர் விஜய், தற்போது அடர்ந்த  ‘வனமகன்‘ படத்தை உருவாக்கி வருகிறார். அடர்ந்த வன பகுதியை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த வனமகன் படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விஜய்

“இயற்கையை விரும்பி நேசிக்கும்  ஒவ்வொருவருக்கும், எங்கள் ‘வனமகன்’ படக்குழுவினரின் சார்பில் சர்வதேச வன நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். இயற்க்கையின் கொடையான வன பகுதிக்கு, சாந்தமான முகமும் இருக்கின்றது, அதே சமயத்தில் ஆக்ரோஷமான முகமும் இருக்கின்றது. அந்த இரண்டு முகங்களும் தான் வன பகுதியை பாதுக்காக்கும் எங்கள் வனமகனின் இரண்டு சிறந்த குணாதியசங்கள். இயற்கை மீது மக்கள்  வைத்திருக்கும் காதலை எங்கள் ‘வனமகன்’ திரைப்படம் நிச்சயமாக  இரட்டிப்பாக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் விஜய்.

இயக்குநர் விஜய்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]