இம்முறை சாதாரண தரப் பரீட்சை ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ள மாணவர்கள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை Www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அத்தோடு உங்கள் டயலொக் கையடக்கத் தொலைபேசியில் Exam என டைப் செய்து இடைவெளி பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்ரொயிட் தொலைபேசிகளில் doenets.lk என்ற செயலியின் (App) ஊடாகவும் அப்பிள் தொலைபேசிகளில் doenets என்ற செயலியின் (App) ஊடாகவும் பரீட்சை முடிவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 656, 641 மாணவர்கள் 4,661 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர்.

இந்தப் பரீட்சைக்கு தோற்றிய 969 மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளை இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இம்முறை உயர்தரம் கல்வி கற்பதற்காக 235,373 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இம்முறை சாதாரண தர பரீட்சையில் 64.11 வீதமான மாணவர்கள் கணிதப்படத்தில் சித்தியடைந்துள்ளனர்.

9413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ´ஏ´ சித்திகளை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]