இம்சையரசன் 24ம் புலிகேசியில் சிக்கல்

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த திரைப்படம் “இம்சை அரசன் 23ம் புலிகேசி” இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார்.

imsai arasan 24m pulikesi

10 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமாக “இம்சை அரசன் 24ம் புலிகேசி” தயாரிக்க முடிவானது.

மீண்டும் வடிவேலு, சிம்புதேவன் இணையும் இப்படத்தை ஷங்கரே தயாரிக்கிறார்.

imsai arasan 24m pulikesi

கதாநாயகியாக பார்வதி ஓமனகுட்டன் ஒப்பந்தம் ஆனார்.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் சில தினங்களுக்கு பிறகு திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டதுடன்,இந்த திரைப்படம் இடைநிறுத்தப்பட்டதாக வதந்தி பரவியது.

imsai arasan 24m pulikesi

தற்போது இதுபற்றி மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. வடிவேலுவுக்கு காஸ்டியூம் டிசைனராக இப்படத்தில் பணிபுரிந்தவரை பட தரப்பு திடீரென்று நிறுத்திவிட்டு வேறு ஒருவரை நியமித்தது.

இதை வடிவேலு ஏற்கவில்லை என்று தெரிகிறது. மீண்டும் பழைய காஸ்டியூம் டிசைனரையே நியமிக்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் கூறப்படுகிறதாம்.

imsai arasan 24m pulikesi

அதை பட தரப்பு ஏற்கவில்லை. இதையடுத்தே படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது. படப்பிடிப்பை சுமூகமாக நடத்துவதுபற்றி இருதரப்பினரிடமும் தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]